இயக்குநர் சுசீந்திரன் புகழ் பாடும் நடிகை!

  Bala   | Last Modified : 16 Jul, 2018 11:31 pm

director-suseenthiran-movie-speak-about-actress-krisha-kurup

’ஏஞ்சலினா' பட நாயகியான க்ரிஷா க்ரூப், இயக்குநர் சுசீந்திரனின் புகழ் பாடிய படியே இருக்கிறார்!    

விஜய் மிடனின் 'கோலிசோடா-2' படத்தில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வசீகரித்தவர் க்ரிஷா க்ரூப். இப்போது அவர், சுசீந்திரனின் ’ஏஞ்சலினா’ படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 
’ஏஞ்சலினா’ பட அனுபவம் குறித்து க்ரிஷா க்ரூப் கூறுகையில், “நான் நடித்த மலையாளப் படமொன்றைப் பார்த்து தான் ’அழகு குட்டி செல்லம்’, ’கூட்டாளி’ ஆகிய பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் எனக்கு, 'கோலிசோடா-2' தான் அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கொடுத்தது.

இப்போது, இயக்குநர் சுசீந்திரனின் 'ஏஞ்சலினா ' படத்தில் டைட்டில் ரோலில் நடித்து வருகிறேன். திடீரென ஒருநாள் சுசீந்திரன் சார் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. ஆடிஷனும் ஓகே ஆனது. இப்போதுவரை அவர், எப்படி என்னை இந்த கேரக்டருக்காக தேர்வு செய்தார்? என்பது கூட எனக்கு தெரியாது. அவரின் ‘வெண்ணிலா கபடி குழு’, ’அழகர்சாமியின் குதிரை’ படங்கள் எனக்கு பிடிக்கும். அவரது பிலிம் மேக்கிங் ஸ்டைலே புதிதாக இருக்கும். ’ஏஞ்சலினா’ படத்தை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். அந்தப் பட ரிலீஸுக்கு பிறகு தான் வேறு படங்களை ஒப்புக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன்” என்கிறார்.
Newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close