அதிரடிப்படையிடம் சிக்கிய ஹீரோ!  

  பால பாரதி   | Last Modified : 17 Jul, 2018 09:39 pm

kazhugu-2-hero-of-the-action-force

அடர்ந்த காட்டுக்குள் நடந்த படப்பிடிப்பின் போது, நடிகர் கிருஷ்ணாவை அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர். 

’அலிபாபா, ’கழுகு’, ’யாமிருக்க பயமேன்’, ’வானவராயன் வல்லவராயன்’ உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் கிருஷ்ணா, இப்போது ’கழுகு 2’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

கேரள மாநிலம் மறையூரில் உள்ள காட்டுப்பகுதியில்  'கழுகு 2' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் செந்நாய்களை கிருஷ்ணா வேட்டையாடும் காட்சி இடம் பெறுகிறது. ஆகாயத்தில் பறந்தவாறு செந்நாய்களை குறி தவறாமல் கிருஷ்ணா சுட வேண்டும். இதற்காக அடர்ந்த காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா ஒரிஜினல் துப்பாக்கியை வைத்து துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுத்து கொண்டார். 

தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டதால் பீதியான பொதுமக்கள், மாவோயிஸ்டுகள் ஆயுத பயிற்சி மேற்கொள்வதாக தகவல் தெரிவித்ததை அடுத்து அந்த பகுதிக்கு விரைந்து வந்த அதிரடிப் படையினர் துப்பாக்கி முனையில் நடிகர் கிரிஷ்ணாவையும், அவரது உதவியாளர்களையும் சுற்றி வளைத்தனர். 

பிறகுதான், அது திரைப்படத்திற்கான ஒத்திகை என்பது தெரிய வந்தது! ஆனால், துப்பாக்கியை ஆய்வு செய்த காவல்துறையினர், அது ஒரிஜினல் துப்பாக்கி என தெரிய வந்ததால், ‘லைசென்சை காட்டிவிட்டு துப்பாக்கியை பெற்று செல்லுமாறு’கூறி, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்,  
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close