படுக்கைக்கு சென்றது ஏன்? - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்!

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2018 02:44 pm

why-did-you-go-to-bed-sri-readdy-open-talk

சினிமா பிரபலங்களின், படுக்கைக்கு சென்றது ஏன்? என்பது பற்றி நடிகை ஸ்ரீரெட்டி மனம் திறந்துள்ளார்!  

சினிமாப் பிரபலங்கள் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டு எழுப்பி தெலுங்கு திரையுலகத்தை தெறிக்க விட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி, இப்போது தமிழ் சினிமாப் பிரபலங்கள் மீது தனது அஸ்திரத்தை எய்தபடி இருக்கிறார்! 

நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர்கள் முருகதாஸ், சுந்தர்.சி போன்ற தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கலைஞர்கள், பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்தாக ’பகீர்’ தகவலை வெளியிட்டு கோலிவுட் படலகத்தையும் கதி கலங்க வைத்திருக்கிறார் தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி!  

தனது பேஸ் ஃபுக் பக்கத்தில், தினமும் ஒருவர் மீது பாலியல் புகார் சொல்லி அதிர வைக்கும் ஸ்ரீரெட்டி சொல்லும் இந்த குற்றசாட்டுகள் நிஜமா? பொய்யா? என்கிற குழப்பம் பலருக்கும் இருக்கிறது! ஏனென்றால் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசிவருகிறார்!  

‘அவர் கூப்பிட்டார், இவர் கூப்பிட்டார்... என்கிறீர்களே, நீங்கள் ஏன் படுக்கைக்கு சென்றீர்கள்?’ என நெட்டிசன்ஸ், ஸ்ரீரெட்டியை கேள்வி மேல் கேள்வியாய் கேட்டுத் துளைத்தெடுக்கிறார்கள்!  
இந்த கேள்விக்கு தனது முகநூல் வழியாக தற்போது பதில் அளித்திருக்கிறார் ஸ்ரீ ரெட்டி! “நான் எனது குடும்பத்தை விட்டு வெளியேறி தனியாக வசிப்பதால் உணவு, இருப்பிடம், பிற செலவுகளுக்கு பணம் தேவைப்பட்டது, அதனால் படுக்கைக்கு சென்றேன்!” என மனம் திறந்திருக்கிறார். 

ஸ்ரீ ரெட்டியின் இந்தப் பதிலில் திருப்தியாகாத நெட்டிசன்கள், ‘இப்படி செய்வதற்கு, வேறு வேலை பார்க்கலாமே?’ என கொஞ்சம் காட்டமாகவே கேட்க, அதற்கு, ”நான் கிளாமர் துறையை சேர்ந்தவள், நான் என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது? என கூறும் உரிமை யாருக்கும் கிடையாது! எனக்கு இந்தத் துறை தான் பிடித்துள்ளது!” என சூடாகவே பதில் சொல்லியிருக்கிறார் ஸ்ரீ ரெட்டி.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close