சுட்டு பிடிக்க உத்தரவு : சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்

  கனிமொழி   | Last Modified : 20 Jul, 2018 09:37 pm

shivakarthikeyan-releases-suttu-pidika-utharavu-first-look

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரி ராஜா ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கிவரும் சுட்டு பிடிக்க உத்தரவு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியிடப்பட்டது. இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் சுசீந்திரன் மற்றும் விக்ராந்த் மூவரும் இணைந்து நடித்து வரும் படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’. இப்படத்தை ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார் .சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதி கட்ட வேலைகளை தீவிரமாக செய்துகொண்டிருப்பதாக படக்குழு தெரிவித்தது.  இப்படத்தை தயாரித்து வருகிறார் கல்பதரு பிக்சர்ஸ் ராம் மோகன். 

சமீபத்தில் வெளியான 'சவரகத்தி' திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்திருந்தார் ,அதே போல இந்த திரைப்படத்திலும் அவர் நடிப்பை எதிர்பார்க்கலாம். திரைப்பட இயக்குநர்கள் எல்லோரும் இப்படி நடிக்க வந்துவிட்டால் நடிகர்களின் நிலைமை என்ன ஆகுமோ தெரியவில்லை .2017ஆம் ஆண்டு வெளியான 'காதல் கண்கட்டுதே' திரைப்படம் மூலம் அறிமுகமான அதுல்ய ரவி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை  நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று மாலை வெளியிட்டு இருக்கிறார்.

'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா கூறியது :

விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் ஆகிய இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் பொழுதே ஒரு திகிலூட்டும் 'க்ரைம்' நடக்கின்றது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஷ்கின் நடிக்கின்றார். இதற்குப் பிறகு என்ன ஆனது என்பதே இந்தக் கதை. பார்வையாளர்களை சீட்டின் நுனியில் உட்கார்ந்து விறுவிறுப்போடு பார்க்கவைக்கும் கதை இது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close