நடிகர் உதயாவுக்கு உதவிய 2 ஹீரோக்கள்!

  Bala   | Last Modified : 22 Jul, 2018 04:58 pm

utharavu-maharaja-new-look-posters-released-by-actor-vishal-and-arya

உதயாவின் ’உத்தரவு மகாராஜா’ படத்தின் நியூ லுக் போஸ்டரை, பிரபல நடிகர்கள் விஷால் - ஆர்யா இருவரும் வெளியிட்டனர்.   

இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் அண்ணனும், நடிகருமான உதயாவின் ஜே‌ஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘உத்தரவு மகாராஜா’. இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து ’கெட் அப்’பில் தோன்றும் நாயகன் உதயா, மிக முக்கியமான ஒரு காட்சிக்காக நிஜத்தில் மொட்டை போட்டு நடித்திருக்கிறார். மேலும் இதில் பிரபு, நாசர், ஸ்ரீமன், மனோபாலா, கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர், குட்டி பத்மினி, தனஞ்செயன், சோனியா போஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 

இந்தப் படத்துக்கு பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்ய, நா.முத்து குமாரின் பாடல் வரிகளுக்கு, நரேன் பாலகுமார் இசை அமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ஆஸிப் குரைசி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் நாயகன் உதயாவும், பிரபுவும் மகாராஜாவைப் போன்ற தோற்றத்தில் குதிரை வீரர்கள் மற்றும் படை வீரர்கள் புடைசூழ போருக்கு செல்வது போன்ற பிரமாண்டமான காட்சி படமாக் கப்பட்டது. அத்துடன் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இப்போது போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், உதயாவுக்கு உதவும் விதத்தில் ’உத்தரவு மகாராஜா’ படத்தின் நியூ லுக் போஸ்டரை, நடிகர்கள் விஷால் - ஆர்யா இருவரும் வெளியிட்டனர்.   
 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close