ரேஸில் இருந்து பின் வாங்கிய ஆர்யா!

  Bala   | Last Modified : 21 Jul, 2018 06:46 pm
arya-s-gajinikanth-release-postponed

ஆர்யாவின் ‘கஜினிகாந்த்’ திரைப்படம், வரும் 27ம் தேதி ரேஸில் இருந்து பின் வாங்கியுள்ளது!   

ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கஜினிகாந்த்’. இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். ‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். 
காமெடி கலந்த குடும்பப் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தற்கு பாலமுரளிபாலு இசையமைத்திருக்கிறார். 

’கஜினிகாந்த்’ படத்திற்கு ’யூ’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, வரும் ஜூலை 27ம் தேதி படத்தை வெளியிடப் போவதாக அறிவித் திருந்தனர். இதே தேதியில் விஜய் சேதுபதியின் ’ஜூங்கா’, த்ரிஷாவின் ’மோகினி’ படங்களும் ரிலீஸ் ஆகிறது. 

இந்நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஆர்யாவின் ’கஜினிகாந்த்’ படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளனர். ஆகஸ்ட் 3ம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close