அப்போ ரஜினி... இப்போ ஜெயலலிதா... த்ரிஷாவின் பேராசை: இதெல்லாம் நடக்கிற காரியாமா?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 25 Jul, 2018 01:52 am

jayalalitha-is-my-roll-model-trisha

த்ரிஷா நடித்த மோகினி படத்தை காட்சிக்கு காட்சி கலரூட்டி மிரட்டி இருக்கிறாராம் இயக்குநர்  மாதேஷ். “லண்டன், பாக்காங்க், மலேசியா என்று ரவுண்டு கட்டி இப்படத்தை படம் பிடித்திருக்கிறோம். பேய் பட வரிசையில் பிரமாண்ட செலவை விழுங்கிய படம் என்றே சொல்லலாம். படம் முழுக்க ரோப் கட்டி தொங்குன திரிஷாவுக்குதான் முதல் நன்றி சொல்லணும்” என பெருமையாக கூறினார் மாதேஷ்.

இந்தப்படத்தின் பிரஸ்மீட்டுக்கு வந்திருந்த திரிஷா, முக்கிய நாளிதழ் நிருபர்களை மட்டும் சந்தித்து மிக நீண்ட பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட  ஒரு கேள்வி.. ‘ஜெயலலிதா கதையை படமாக எடுத்தால் அந்த கேரக்டரில் நீங்க நடிப்பீங்களா?’
“நிச்சயம் நடிப்பேன். அவங்களைப்போல தோற்றத்துக்காக வெயிட் ஏத்துறதுன்னா கூட ஏத்துவேன். அவங்கதான் என்னோட ரோல் மாடல். அதுக்காக அரசியலுக்கு வருவீங்களான்னு கேட்காதீங்க?” என்றார் த்ரிஷா.

பத்தாண்டுகளாக நாயகியாக வலம் வந்தும் ரஜியுடன் ஹீரோயினாக நடிக்கமுடியவில்லை என்கிற வருத்தத்தில் இருக்கிறார் த்ரிஷா. இப்போது ஜெயலலிதா உருவத்தில் நடிக்கும் ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close