விவேக் கார் டிரைவரால் தோல்வி... டென்ஷனாகும் அஜித் ரசிகர்கள்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 26 Jul, 2018 04:54 pm

vivek-car-driver-fails-tenson-for-ajith-fans

அஜித் நடித்த ஆழ்வார் படத்தை இயக்கிய இயக்குநர் செல்லா 11 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். படத்தின் விளம்பரத்துக்கு அஜித் பெயரை பயன்படுத்துவதால், அஜித் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

அஜித் கேரியரில் மிக முக்கியமான தோல்வி படம் ஆழ்வார். அந்தப்படத்தை இயக்கிய செல்லா நடிகர் விவேக்கிடம் டிரைவராக இருந்தவர். செல்லாவின், திரைப்படங்கள் மீதான அதீத ஆர்வத்தைக் கண்டு அஜீத்திடம் அனுப்பி வைத்து கதை சொல்ல வைத்தார் விவேக். விவேக் மீதான அபிப்பிராயத்தில் கதையைக் கேட்டு ஓ.கே செய்தார் அஜித். அந்தப் படம்தான் ஆழ்வார். ஆனால், படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது எல்லாம் வரலாறு. இதன்பிறகு செல்லா திரைப்பட உலகில் காணாமல் போனார். இப்போது, 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார் ஆழ்வார் செல்லா. 


இந்நிலையில் தனது பட ப்ரமோசனுக்காக ’அஜீத் நடித்த ஆழ்வார் படத்தை இயக்கிய டைரக்டரின் அடுத்த படம்’ என விளம்பரம் செய்து வருகிறார்கள். தோல்வி படத்தை கொடுத்த இயக்குநர் மீண்டும் அஜீத் பெயரை வைத்து விளம்பரம் தேடிக்கொள்ளலாமா என தல ரசிகர்கள் கடும் கோபமடைந்து வருகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close