அப்பா நடித்த படத்தில் நடிக்க மறுக்கிற அதர்வா

  இரமேஷ்   | Last Modified : 27 Jul, 2018 03:44 am

adarva-refuses-to-act-in-murali-s-starrer-film

முதல் படத்தில் கவனம் ஈர்த்தாலும், அடுத்தடுத்து அவசரப்படாமல் தேர்ந்தெடுத்தே படங்களில் நடிக்கிறார் அதர்வா. 

தற்போது, ‘பூமராங்’, ‘ஒத்தைக்கு ஒத்த’ , ‘100’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. இவற்றில் ‘பூமராங்’ திரைப்படத்தின் படபிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராக உள்ளது. சாம் ஆண்டன் இயக்கி வரும் 100 திரைப்படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் படத்துக்கான டப்பிங் வேலைகளும் ஆரம்பித்து விட்டன. இந்த படத்தின் வேலைகளை முழுமையாக முடித்ததும்,‘மரகத நாணயம்’ இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணனின் அடுத்த திரைப்படத்தில் அதர்வா நடிக்கிறார். 

இந்நிலையில், விஜய்யை வைத்து பிரியமுடன், யூத் என படங்களை இயக்கிய வின்செண்ட் செல்வா, ஸ்டண்ட் மாஸ்டர் சிவாவை கதாநாயகனாக வைத்து ‘வேட்டையன்’ எனும் படத்தை இயக்கவிருக்கிறார். 

‘இரணியன் -2’ படத்தில் நடிக்க பலபேரிடம் கதைச் சொல்லியும் எந்த ஹீரோவும் முன்வரவில்லை. நடிகர் அதர்வாவையும் இரண்டு முறை சந்தித்தேன். அவரும் அதில் ஆர்வம் காட்டவில்லை’ என்று இயக்குநர் வின்செண்ட் செல்வா கூறியுள்ளார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close