ரீலீசுக்கு தயாரான 'குயின்' ரீமேக் படங்கள்

  கனிமொழி   | Last Modified : 27 Jul, 2018 09:03 pm

queen-remake-is-set-to-release-soon

கங்கனா ராணாவத் நடிப்பில் பாலிவுட்டில் 2014ம் ஆண்டு வெளியானசூப்பர் ஹிட்  படம் 'குயின்'. இத்திரைப்படத்தை விகாஸ் பஹல் இயக்கினார். ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் என்பதனால் இந்த திரைப்படத்தை கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் என நான்கு மொழிகளில்  ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. ரீமேக் செய்யப்படும் தென்னிந்திய மொழி படங்களுக்கு படத்தின் பெயர் வேறுபடுவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ரீமேக் படத்தில் காஜல் அகர்வால் நடித்துவருகிறார், இப்படத்திற்கு 'பாரிஸ் பாரிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. கன்னடத்தில்' பட்டர்ப்ளை' என்று ரீமேக் செய்து வரும் படத்தில் பருல் யாதவ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு மொழி திரைப்படங்களை இயக்கி வருகிறார் ரமேஷ் அரவிந்த்.

தெலுங்கில் தமன்னா நடித்து வரும் படத்திற்கு 'தட்ஸ் மஹாலக்ஷ்மி' எனவும் மஞ்சிமா மோகன் நடித்து வரும் மலையாள திரைப்படத்திற்கு 'ஜாம் ஜாம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் யுரோப்பிய நாடுகளின் பகுதிகளில் இந்த திரைப்படங்களின் படப்பிடிப்பு நடந்துள்ளது. இறுதி கட்ட படபிடுப்புகள் முடிவடைந்த நிலையில் நடிகை பருல் யாதவ் தனது ட்விய்ட்டர் பக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரு வழியாக முடிந்ததில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

அணைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் சிறப்பாக வந்துள்ளதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் மனு குமரன். அக்டோபர் மாதம் ஒரே நேரத்தில் நான்கு மொழி படங்களையும் வெளியிடவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close