ஜெயலலிதாவாக நடிக்க ரெடி : த்ரிஷா பேட்டி

  Newstm Desk   | Last Modified : 28 Jul, 2018 05:34 pm
trisha-ready-to-act-as-jayalalitha

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்தால், அதில் நடிக்கத் தயார் என்று த்ரிஷா தெரிவித்திருக்கிறார்.

மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மோகினி’. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்திருக்கிறது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் த்ரிஷா கலந்துகொண்டார். அப்போது ‘ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக எடுத்தால் நீங்கள் நடிப்பீர்களா’ என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த த்ரிஷா, ''சென்னையில் ஜெயலலிதா படித்த பள்ளியில் தான் நானும் படித்தேன். என்னுடைய 10-வது வயதில், என் பள்ளி விழாவுக்கு அவர் வந்திருந்தார். அவரைப் பார்த்ததிலிருந்தே, அவர் மீது பாசம், மரியாதை. அவர் கையால் வாங்கிய சினிமா விருது புகைப்படத்தைத் தான் இப்போதும் என் ட்விட்டரின் முகப்புப் படமாக வைத்திருக்கிறேன். ஜெயலலிதா வாழ்க்கை வரலாறைச் சினிமா படமாக எடுத்தால், அவரது கதாபாத்திரத்தில் நடிக்க நான் தயார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஆனால், எனக்கு அரசியல் ஆர்வமெல்லாம் கிடையாது. நடிகையாகவே சந்தோஷமாக இருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close