ஒரே நாளில் 18 லட்சம் பேர் பார்த்த வடசென்னை டீசர்!

  Newstm News Desk   | Last Modified : 29 Jul, 2018 08:55 am

vadachennai-movie-teaser-gets-good-reception

ரிலீசான ஒரே நாளில்  யூடியூப்பில் 18 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது வடசென்னை படத்தின் டீசர். 

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மூன்றாவது படம் வடசென்னை. தனுஷின் வண்டர்பார் மற்றும் லைகா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தில், தனுஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், கிஷோர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இப்படத்தின் பிரத்யேக டீசர், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. 

மிரட்டும் வசனங்களுடன் இருக்கும் இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று வெளியான இந்த டீசர், யூடியூப்பில் ஒரே இரவில் 18 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனைப்படைத்துள்ளது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.