அக்டோபரில் வெளியாகும் காற்றின் மொழி

  கனிமொழி   | Last Modified : 31 Jul, 2018 09:27 am
jyothika-s-kaatrin-mozhi-to-release-in-october

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் திரைப்படம் காற்றின் மொழி. இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகார்வபூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் வித்யா பாலன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'தும்ஹாரி சுலு'. இதை தமிழில் காற்றின் மொழி என்று ரீமேக் செய்கின்றனர். இந்தப் படத்தை தயாரித்துள்ளார் தனஞ்சயன். ஜோதிகா, விதார்த், லட்சுமி மன்சு, எம்.எஸ் பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் காற்றின் மொழியில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் . நடிகர் சிம்பு இத்திரைப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பது தெரியவந்தது.

ஜூலை 4 அன்று ஆரம்பித்த ஷூட்டிங்கை ஜூலை 25 வரை இடைவேளை ஏதும் இல்லாமல் ஜோதிகா நடித்து கொடுத்ததில் மகிழ்ச்சி என்று படக்குழு தெரிவித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்ததால், டப்பிங் உள்ளிட்ட வேலைகள் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது. அதேநேரத்தில் படத்தை வெளியிடுவது தொடர்பாக, தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கதை அனுகியது படத் தயாரிப்பு நிறுவனம். அவர்கள்,அக்டோபர் 18ம் தேதி வெளியிட அனுமதித்துள்ளனர். இதைத் தொடர்ந்து எடிட்டிங், டப்பிங் வேலைகளில் படக்குழு பிஸியாகிவிட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close