கௌதம் மேனனுடனான பிரச்சனைக்கு பதில் சொன்ன கார்த்திக் நரேன்.

  Newstm Desk   | Last Modified : 01 Aug, 2018 02:36 pm
karthik-naren-s-reply-to-gauthammenon

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர் கார்த்திக் நரேன். அவரது இயக்கத்தில் வரவிருக்கும் இரண்டாவது படம் ‘நரகாசூரன்’. இந்தப் படம் கௌதம் மேனன் தயாரிப்பில் தொடங்கப்பட்டது. படம் முடிந்த நிலையில் கௌதம் மேனன் இந்தப் படத்தின்பேரில் கடன் வாங்கிய நிலையில் இப்படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என கார்த்திக் நரேன் குற்றம் சாட்டினார். பின் இருவரும் மாற்றி மாற்றி குற்றம் சொல்லி வந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி, இம்மாத இறுதி என அறிவித்திருக்கிறார்கள்.

கார்த்திக் நரேன் பேசும் போது, கெளதம்மேனனுடனான பிரச்னை குறித்தும் பேசினார். கௌதம் சார் என் முதல் படம் பார்த்து விட்டு, ‘ நாம் சேர்ந்து படம் பண்ணலாம்’ என்றார். அவர் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமை அதனால் உடனே ஒத்துக்கொண்டேன். படம் ஆரம்பித்த சில நாட்களில் அவரால் இந்தப்படம் செய்ய முடியவில்லை. அப்போது தான் பத்ரி சார் வந்தார். அவரால் தான் இந்தப் படம் சாத்தியமானது. நமக்கு பிடித்தவர்கள் தவறு செய்யும் போதுதான் நமக்கு அதிக கோபம் வரும். கெளதம்மேனன் விஷயத்தில் நான் கோபப்பட்டது அப்படித்தான். இப்போது யூனியனில் பிரச்னை பேச்சு வார்த்தையில் இருக்கிறது. எல்லாம நல்லபடியாக நடந்து வருகிறது. இதைப்பற்றி இப்போது பேச வேண்டாம்’ என்றார். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close