பிரபல இயக்குநர் சிவக்குமார் மரணம்; அழுகிய நிலையில் உடல் மீட்பு!

  ஐஸ்வர்யா   | Last Modified : 02 Aug, 2018 06:06 pm

director-sivakumar-died

திரைப்பட இயக்குனர் சிவக்குமாரின் உடல் அழுகிய சடலமாக அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் வெங்கடேசா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இயக்குநர் சிவக்குமார் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்து அவரது வீட்டிற்கு சென்று போலீசார் பார்த்தபோது பூட்டிய வீட்டில் நாற்காலியில் அமர்ந்தபடி இறந்து கிடந்துள்ளார். அழுகிய நிலையில் கிடந்த இருந்த அவரது உடலை சடலமாக மீட்டனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்துபோன சிவக்குமார் நடிகர் மற்றும் இயக்குநரான பாக்யராஜுடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். மேலும், இரட்டை ஜடை வயசு, ஆயுதபூஜை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close