எனக்கு விசுவாசம் இருக்கா?- அஜித்தை வாழ்த்தி பாலிவுட் நடிகர் ட்வீட்

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2018 08:37 am
bollywood-actor-vivek-oberoi-wished-ajith-for-26-years-of-cinema-life

நடிகர் அஜித் தனது முதல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி 26 ஆண்டுகள் ஆகும் நிலையில் அவருக்கு நடிகர் விவேக் ஓப்ராய் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நடிகர் அஜித் நடிப்பில் 1993ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி அமராவதி படம் வெளியானது. இந்த படத்தில் நடிக்க அவர் 1992ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் பின் கடின உழைப்பால் தற்போது தனக்கென ரசிகர் பட்டாலத்தையே உருவாக்கி இருக்கிறார். 

இந்த 26 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் #26YrsOfUnparalleledAJITH என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய்யும் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

 

அந்த பதிவில், "என்னுடைய நண்பர், கடந்த 26 வருடங்களாக பெரிய ஆளுமையாக வளர்ந்துள்ளார். லவ் பூ சகோ!. நீங்கள் தொடர்ந்து எங்களை மகிழ்விப்பீர்கள் என்று நம்புகிறேன். எனக்கு விசுவாசம் இருக்கா!" என குறிப்பிட்டுள்ளார். இவர் விவேகம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close