பியார் பிரேமா காதல் ரிலீஸ் தேதியில் மாற்றம்!

  கனிமொழி   | Last Modified : 04 Aug, 2018 06:51 pm

pyar-prema-kathal-release-date-changed

ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் உருவாகியுள்ள பியார் பிரேமா காதல் திரைப்படம் திட்டமிடப்பட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே வெளியாக உள்ளது.

கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா. பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் இளன் இயக்கியுள்ள இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜாவும், ராஜராஜனும் இணைந்து தயாரித்துள்ளனர்.

கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், வரும் 10ம் தேதி இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி 10ம் தேதி ரிலீசாகாமல், ஒரு நாள் முன்னதாக 9ம் தேதியே இப்படம் ரிலீசாக இருக்கிறது. இது குறித்து ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் தங்களது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


ஆகஸ்ட் 10ம் தேதி கமலின் விஸ்வரூபம் 2 படம் ரிலீசாகிறது. இதனால், நயன்தாராவின் கோலமாவு கோகிலா படம் ஒரு வாரம் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில், பியார் பிரேமா காதல் ஒரு நாள் முன்கூட்டியே ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close