உன் விரல் இடுக்குல, என் விரல் இருக்கணும்: நயன்- விக்னேஷ் சிவன் வைரல் ஃபோட்டோ

  Newstm Desk   | Last Modified : 07 Aug, 2018 02:51 am
vignesh-shivan-shares-pic-with-nayanthara-on-frienship-day

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆகஸ்ட் மாதம் முதல் வியாழக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன்படி நேற்று சர்வதேச நண்பர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பல பிரபலங்கள் தங்கள் நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு இருந்தனர்.

இது போல இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். நயன்தாராவுடன் இருக்கும் அந்த புகைப்படத்துடன், "இந்த காதலில் நிறைய நட்பு இருக்கிறது, இந்த நட்பில் நிறைய காதல் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். 

 

 

There’s so much of friendship in this Love 💕 and a lot more love in this friendship 😘😍 #HappyFriendShipDay #Nayanthara 😘😍💕💕💕

A post shared by Vignesh Shivn (@wikkiofficial) on

இதனை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகிறது. மேலும், நானும் ரவுடி தான் படத்தில், விக்னேஷ் சிவன் எழுதிய "உன் விரல் இடுக்குல என் விரல் இருக்கனும்" என்ற வரிகளுக்கு ஏற்றார் போல அவர் நயன்தாராவின் கையை இறுக்கமாக பிடித்திருப்பதையும் ரசிகர்கள் கவனித்து பதிவிட்டு வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close