ரிலீசுக்கு தயாராகும் 100 % காதல்

  Newstm Desk   | Last Modified : 07 Aug, 2018 02:47 am

100-kaadhal-to-be-released-soon

ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள 100 % காதல் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்தது.


நடிகர் ஜி.வி பிரகாஷ் மற்றும் ஷாலினி பாண்டே இணைந்து நடித்துள்ள திரைப்படம் 100 % காதல். அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான ஷாலினி பாண்டே இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

2011ம் ஆண்டு தெலுங்கில் நாக சைத்தன்யா தம்மனா நடிப்பில் வெளியான 100 % லவ் படத்தின் தமிழ் ரீமேக் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன இந்த திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் அறிமுக இயக்குனர் சந்திரமௌலி.

மேலும் இப்படத்தில் நாசர், ஜெயசித்திரா, சதீஷ், தலைவாசல் விஜய், மனோபாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த  நிலையில் விரைவில் இத்திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழுவினர் தெரிவித்த்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close