'பியார் பிரேமா காதல்' படம் இன்று ரிலீஸ் இல்லை!! 

  சுஜாதா   | Last Modified : 09 Aug, 2018 07:28 am

pyaar-prema-kaadhal-release-date-is-changed

புதுமுக இயக்குனர் இளன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் - ரைசா நடிப்பில் உருவாகியுள்ள  பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன். இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம் தான் `பியார் பிரேமா காதல்'.  புதுமுக இயக்குநர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்ததுடன்,  'கே புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் ராஜராஜனுடன்  இணைந்து தயாரித்துள்ளனர். 
 
ஆகஸ்ட் 9-ஆம் தேதி  (இன்று)  படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது.  இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி மறைவானதால், தங்களுடைய படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி (நாளை)  வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

நாளை (ஆகஸ்ட் 10-ஆம் தேதி)  கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 திரைப்படமும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close