கருணாநிதி மறைவு குறித்து நயன்தாரா

  Newstm Desk   | Last Modified : 09 Aug, 2018 08:28 pm

nayanthara-s-statement-on-karunanidhi

திமுக தலைவரும்,முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி மறைவுக்கு நடிகை நயன்தாரா இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை 6.10 மணிக்கு காலமானதை அடுத்து நேற்றிரவு அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் 24 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யபட்டது. இந்நிலையில் தமிழ் திரை துறைக்கு எண்ணற்ற பணியாற்றியுள்ள கருணாநிதிக்கு பல திரையுலக கலைஞர்களும் அஞ்சலி செலுத்தினர். நேரில் வரமுடியாத சிலர் இரங்கல் செய்தி வெளியிட்டு தங்கள் வருத்தத்தை தெரிவித்து கொண்டனர்.

அந்த வகையில் நயன்தாரா  வெளியிட்டுள்ள இரங்கல் கடிதத்தில், ''தங்களுடைய இனமான தலைவனை இழந்து வாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்துக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் இரங்கல் செய்தி இது. நம் வாழ்வில் மிகுந்த இருண்ட 24 மணி நேர சோதனை இது, என சொல்லலாம். சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம்.நாம் காலத்தை வென்ற எழுத்தாளரை, சிறந்த சொற்பொழிவாளரை, மிகச் சிறந்த அரசியல்வாதியை, நம் மாநிலத்தின் முகவரியான முகத்தை இழந்து வாடுகின்றோம். நம் மாநிலத்தின் குரலாக 75 ஆண்டுகளாக அவர் குரல் இருந்து வந்தது.

அவர் ஆற்றி இருக்கும் சாதனைகள் எண்ணில் அடங்காதவை. அவர் ஆட்சியில் இருக்கும்போது புரிந்த சாதனைகள் மறக்க முடியாதவை. அவர் பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்ற கழகத் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் இந்த மீளா துயரில் இருந்து மீண்டு வர என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். வெளி ஊரில் நடந்து வரும் படப்பிடிப்பு காரணமாக அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close