கருணாநிதி நினைவிடத்தில் த்ரிஷா மலர் அஞ்சலி

  கனிமொழி   | Last Modified : 09 Aug, 2018 07:34 pm

trisha-pays-respect-in-karunanidhi-memorial

திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடிகை த்ரிஷா மலர் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி நேற்று முன் தினம்  காலமானதை அடுத்து நேற்றிரவு அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் 24 குண்டுகள் முழங்க மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.. இந்நிலையில் நேரில் வரமுடியாத  சினிமா பிரபலங்கள் சமுக வலைதளத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டு தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக நேரில் வந்து கருணாநிதியின் உடலைப் பார்க்க முடியாதவர்கள், இன்று அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இதை தொடர்ந்து  நடிகை த்ரிஷாவும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். அங்கு பத்திரிகையாளர்களிடம் பேசிய த்ரிஷா, “சினிமாத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உதயநிதி ஸ்டாலின், துரை தயாநிதி ஆகியோரை எனக்கு நன்றாகவே தெரியும். அவர்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இழப்பு, எல்லாருக்குமான இழப்பு. கவிஞர், எழுத்தாளர் எனப் பலத் திறமைகள் கொண்ட மிகப்பெரிய மனிதர். அவருடைய இழப்பை எண்ணி நீண்ட நாட்களுக்கு நாம் வருத்தப்படுவோம்” என்றார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.