சூர்யாவைப் பற்றி செல்வராகவன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

  திஷா   | Last Modified : 10 Aug, 2018 07:50 pm

selvaragavan-s-tweet-about-surya

தானா சேர்ந்த கூட்டம் படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது 'NGK' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை இயக்குநர் செல்வராகவன் இயக்குகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி நடிக்கிறார்கள். 

படத்திற்கு இசை செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. அதோடு தனுஷ் இந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். ஏற்கனவே செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியாகாமல் இருக்கும் நிலையில்,  'NGK'-வும் தீபாவளிக்கு வெளியாகாது என தகவல் வெளியானது. 

இந்நிலையில், ' நான் வேலை செய்த நடிகருடன் மீண்டும் வேலை செய்ய வேண்டும் என்றால் அது நிச்சயம் சூர்யா தான். அவரின் பெர்ஃபார்மென்ஸ், அர்ப்பணிப்பு, கடின உழைப்பைக் கண்டு வியக்கிறேன்' என தனது ட்விட்டரில் சூர்யாவை புகழ்ந்துள்ளார் செல்வராகவன். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close