ரசிகர்களை கவர்ந்த பியார் பிரேமா காதல் ஸ்னீக் பீக்

  Newstm Desk   | Last Modified : 10 Aug, 2018 02:52 pm
pyaar-prema-kadhal-movie-sneak-peak-goes-viral

இன்று வெளியாகி உள்ள 'பியார் பிரேமா காதல்' படத்தின் ஸ்னீக் பீக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகி இன்று நாடு முழுவதும் வெளியாகி உள்ள படம் 'பியார் பிரேமா காதல்'. இதில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது. டிரைலர், பாடல்களை போல இதற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யான், நாயகியை முதல் முறையாக பைக்கில் அழைத்து செல்வது போன்ற காட்சிகள் உள்ளன. 

இதைப் படிச்சீங்களா: #Biggboss Day 53: வைஷ்ணவிக்கு வாய்ல தான் சனி!

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close