கோபாலபுரத்தில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய கார்த்தி

  திஷா   | Last Modified : 10 Aug, 2018 09:56 pm

karthi-visits-gopala-puram-to-pay-his-respect-to-kalaignar

கலைஞர் கருணாநிதியின் மரணத்திலிருந்து தமிழகம் இன்னும் மீளவில்லை. அவர் உடல்நிலை குன்றி வீட்டில் சிகிச்சைப் பெற்ற போது பல்வேறு அரசியல் தலைவர்கள் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று நலம் விசாரித்தனர். 

பிறகு தீவிர சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கும் பல தேசிய தலைவர்களும் சினிமா பிரபலங்களும் தொடர்ந்து நலம் விசாரித்து வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய் மாலை 6.10-க்கு அவர் உயிர் பிரிந்தது. 

இந்த செய்தி வெளியானதும் தேசிய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும், தொண்டர்களும், பொது மக்களும், காவேரி மருத்துவமனை, கோபாலபுரம், சி.ஐ.டி காலனி, ராஜாஜி ஹால் என அவர் உடல் வைக்கப் பட்டிருந்த இடங்களுக்கு விரைந்து தங்களது அஞ்சலியை செலுத்தினர். 

படப்பிடிப்புக்காக வெளியூரில் இருந்த பிரபலங்கள் சமூக வலைதளம் மற்றும் அறிக்கைகள் வாயிலாக தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். இந்நிலையில் அவருக்கு இறுதி மரியாதையை செலுத்த முடியாமல் நடிகர் கார்த்தி, இன்று கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று கலைஞரின் படத்துக்கு மலர் தூவி, மரியாதை செலுத்தினார். அப்போது தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர். 


மற்ற செய்தியைப் பார்க்க 19-08-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.