செக்க சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

  திஷா   | Last Modified : 11 Aug, 2018 11:45 am
ccv-release-date

‘காற்று வெளியிடை’ படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கி வரும் படம் ‘செக்கச்சிவந்த வானம்’. இதில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், தியாகராஜன், ஜெயசுதா என முன்னணி நடிகர்கள் பலரும் நடித்து வருகிறார்கள். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது.

தற்போது, படத்தை செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செக்க சிவந்த வானம் படத்தின் ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் அறிவிக்கப் பட்டுள்ளது. அதோடு விரைவில் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியாகும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close