ஹன்சிகாவின் 50-வது பட டைட்டில் வெளியீடு!

  திஷா   | Last Modified : 12 Aug, 2018 04:26 pm

hansika-s-50th-movie

இந்தியில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து தேசமுத்ரு என்ற தெலுங்குப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. 2007-ல் ஹீரோயினானாலும் 2011-ல் தான் தமிழுக்கு அறிமுகமானார். 

தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படம் தான் ஹன்சிகாவுக்கு தமிழில் முதல் படம். தொடர்ந்து எங்கேயும் காதல், ஓகே ஒகே, வேலாயுதம் போன்ற படங்களில் நடித்தார். விஜய், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகாவின் கரியர் கிராஃப் எதிர்பாராத விதமாக சரியத் தொடங்கியது.  

சமீபத்தில் சொல்லிக் கொள்ளும் படி எந்தப் படமும் அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. இதெல்லாம் ஒருபுறமிருக்க தற்போது தனது 50-வது படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் ஹன்சிகா. படத்திற்கு மஹா எனப் பெயரிடப் பட்டுள்ளது. இந்த டைட்டிலை தனுஷ் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் உருவாகிறது. யூ.ஆர்.ஜமீல் இயக்கும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். எக்ஸட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் இதனைத் தயாரிக்கிறார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close