செக்க சிவந்த வானம் : சிம்பு ஃபர்ஸ்ட் லுக்

  கனிமொழி   | Last Modified : 16 Aug, 2018 05:59 pm
simbu-character-look-poster-from-ccv

செக்க சிவந்த வானம் படத்திலிருந்து சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

மணிரத்தினம் இயக்கிவரும் செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு,விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி,அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ்,அதிதி ராவ் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துவருகிறார்.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும்  17 வது திரைப்படம் இது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் சந்தோஷ் சிவன். ஆக்ஷன் திரில்லர் என அட்டகாசமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை வருகிற செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு  திட்டமிட்டுள்ளது. அரவிந்த் சாமி அவர்களுக்கு வரதன் என பெயர் வைத்துள்ள ஃபர்ஸ்ட் லுக் வெளியானது அதை தொடர்ந்து அருண் விஜய்யின் தியாகு என பெயர் வைத்துள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நேற்று விஜய் சேதுபதியின் ரசூல் என்ற பெயரோடு  ஃபர்ஸ்ட் லுக்  வெளியான நிலையில் இன்று சிம்புவின் எத்தி  என்ற பெயருடன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

 

 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close