நயன்தாராவின் நடிப்பை பாராட்டிய விக்னேஷ் சிவன்

  கனிமொழி   | Last Modified : 17 Aug, 2018 01:48 pm
vignesh-sivan-tweet-about-kolamaavu-kokila

நயன்தாரா நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் கோலமாவு கோகிலா. இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார் அனிருத். மேலும் சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, யோகி பாபு, ஜாக்லின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

 

 

நயன்தாராவை 'நானும் ரவுடி தான்' திரைப்படத்தில் இயக்கிய விக்னேஷ் சிவன் தற்போது வெளியாகியுள்ள கோலமாவு கோகிலா படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், "நெல்சனின் திரைக்கதையும் கதையை இயக்கியுள்ள ஸ்டைலும் அருமையாகாயுள்ளது, வழக்கம் போல அனிருத் இசையும் சூப்பர். நயன்தாராவின் புத்திசாலித்தனமான நடிப்பும், இந்த படத்தை தியேட்டரில் பார்க்க ஆர்வம் ஏற்படுத்தும் " என்று விக்னேஷ் சிவன் ட்விட்டரில் கோலமாவு கோகிலா பட குழுவினருக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் பிரோமோ வீடியோவை விக்னேஷ் சிவன் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close