மீண்டும் அதிரடி...திருப்பரங்குன்றம் தொகுதியில் களமிறங்கும் விஷால்..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 18 Aug, 2018 10:20 pm

again-in-action-thirupparankundram-constituency-in-vishal

உணர்ச்சிவசப்பட்டு பேசுவதில், இன்னொரு நாஞ்சில் சம்பத்தோ என்று அசரடிப்பவர் விஷால். ஆனால், செயலலில் சண்டைக்கோழி. ஆப்பிள் பழம் போனால் ஆரஞ்சு பழம் என விடாப்பிடியாக களமிறங்குபவர். 

நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என அடுத்தடுத்த வெற்றியை நாட்டியவருக்கு அரசியல் ஆர்வம் இல்லாமல் போயிருந்தால்தான் ஆச்சர்யம்! ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தடாலடியாக களமிறங்கினார். நாமினேசன் தாக்கல் செய்தார். கையெழுத்து குளறுபடியால் நிராகரிக்கப்பட்டது அவரது மனு. தொடர்ந்து பல வழிகளில் முயற்சித்தும் முட்டுக்கட்டை போட்டது தேர்தல் ஆணையம். 
வெறுத்துப்போன விஷால், இனி அடுத்து எந்தத் தேர்தல் வந்தாலும் நிச்சயம் போட்டியிடுவேன் என அப்போதே சூளுரைத்து இருந்தார். 
இப்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் காலமானதாலும், திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.,வான கருணாநிதி மறைந்ததாலும், இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த முறை திருப்பரங்குன்றம் தொகுதியை டிக் அடித்திருக்கிறார் விஷால். காரணம் மதுரை செண்டிமெண்ட். சண்டைக்கோழி முதல்பாகம் மதுரை பகுதியை கதைக்களமாக கொண்டது. அதேபோல் அவர் நடித்த பாண்டிய நாடு திதைப்படமும் மதுரையை பின்னணியாக கொண்ட படம். இப்போது சண்டைக்கோழி-2 படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அவர் திரைப்படத்தில் பேசிய ’நானும் மதுரைக்காரன்தாண்டா’  வசனம் மிகப்பிரபலம்.

 

அந்த நம்பிக்கையில் திருப்பரங்குன்றத்தில் களமிறங்கத் தயாராகிவிட்டார் விஷால் என அவரது ரசிகர் மன்றத்தினர் கூறுகின்றனர். ’’சண்டைக்கோழி-2 படத்தின் சூட்டிங்கை முடித்து விட்டு திருப்பரங்குன்றத்தில் களமிறங்குவது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆர்.கே.நகர் குளப்பம் இந்த முறையும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். விரைவில் இதுகுறித்த அறிவிப்பை விஷால் வெளியிடுவார்’’ என்கிறார்கள் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close