விஜய், அஜித்திற்கு மனிதாபிமானமே இல்லையா..? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 18 Aug, 2018 10:17 pm
vijay-ajith-is-humanitarian-frying-netties

கடவுளின் தேசமான கேரளா மழைநீரால் சூழப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து தவிக்கின்றனர். 324க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள். லட்சக்கணக்கானோர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இன்னும் மழை கோரதாண்டவமாடி வருகிறது.

100 ஆண்டுகளாக இல்லாத மழை கொட்டிதீர்த்து வருவதால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி விட்டன. விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. நிலச்சரிவுகள் நிகழ்ந்து வருகின்றன. சேரும் சகதியுமாக குற்றுயிருராய்க் காட்சியளிக்கிறது கேரளா. 
இந்நிலையில், அண்டை மாநில அரசுகளும், தொழில் அதிபர்களும், நடிகர்களும் வெள்ள நிவாரண நிதிகளை முன் வந்து அளித்து வருகின்றனர்.  தமிழ் திரையுலகை சேர்ந்த சூர்யா- கார்த்திரூ. 25 லட்சமும், விஜய் சேதுபதி 25 லட்சம், கமல்ஹாசன் 25 லட்சம், சிவகார்த்திகேயன் 10 லட்சம், நயன் தாரா 10 லட்சம் என முதலமைச்சர் நிவாரண நிதிகளுக்கு அளித்து வருகின்றனர். ரஜினிகாந்த் வெள்ளநிவாரண நிதி வழங்கவில்லையே என விமர்சனம் எழுந்து வந்த நிலையில் நேற்று 15 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார்.  

இந்நிலையில், விஜய், அஜித் இதுவரை வெள்ளநிவாரணம் வழங்காதது விவாதப்பொருளாகி இருக்கிறது. ’விஜய்க்கு கேரளாவில் பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஆனால் அவர் வாய்திறக்கவில்லை. தடுக்கி விழுகிறவர்களுக்கெல்லாம் ஓடி வந்து உதவும் அஜித்தும் கண்டு கொள்ளவில்லை. இதுதான் அவர்களின் மனிதாபிமானமா?’ என கோடம்பாக்கம் முழுவதும் விஜய், அஜித் பற்றியே விமர்சன மேகம் சூழ்ந்து கொண்டிருக்கிறது.

 

சமூக வலைதளங்களிலும் அவர்களைப்பற்றிய கருத்துகள் மழையாய் பொழிந்து வருகின்றன. அவர்களுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ‘ ஏ.. இந்த அஜித், விஜய்? ச்சீசீ.. ஓ.கேரளா எங்க இருக்கு. அது தூத்துக்குடில இருந்து 40 கிலோமீட்டர் உள்ளே போகணும்’’ எனவும்

‘’கேரளா வெள்ள நிவாரணத்திற்கு நயன்தாரா, ரோகிணி எல்லாம் கொடுக்கிறபோது அஜித், விஜய் எல்லாம் சும்மா இருக்காங்க. அப்படி என்றால் அவங்களுக்கு தமிழ்படம்-2 வில் சொன்னது போல எனக்கு ‘யு’ வேணும், வரி விலக்கு வேணும், மாஸ் ஓபனிங் வேணும்’ அது மட்டும் போதும் என இருப்பார்கள் போல’ எனத் தெரிவித்துள்ளனர்.

 

‘இதுவரைக்கும் தமிழக இளைஞர்களின் மனம் கவர்ந்த ஹீரோக்கள் விஜய், அஜித் சல்லிப்பைசா கொடுக்கவில்லை’ எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர். இணையதளங்களும் இதைப்பற்றி எழுதி வருகின்றன. ’கேரள வெள்ள நிவாரணம்- அஜித், விஜய் மெளனம்’ போன்ற தலைப்புகளில் பக்கம் பக்கமாய் எழுத ஆரம்பித்துள்ளன.

 

இந்நிலையில், நடுநிலைமையான கருத்துகளும் வந்து குவிகின்றன. ‘கேரள வெள்ள நிவாரணத்திற்கு அஜித் காசு கொடுக்கவில்லை... விஜய் காசு கொடுக்கவில்லை.. ரஜினி வாயே திறக்கவில்லை என போராளிகள் கூறுகின்றனர். சரி, நீ எவ்வளவு கொடுத்தாய்? போன்ற கருத்துகளும் குவிந்து வருகின்றன. 

கேரளம் மழையால் சூழப்பட்டுள்ளது என்றால், தமிழகம் விஜய், அஜித் விமர்சனப்பதிவுகளால் பொங்கி வழிகின்றன.     
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close