அரவிந்த் சாமிக்கு ஜோடியாகும் ரெஜினா

  கனிமொழி   | Last Modified : 22 Aug, 2018 05:31 pm

regina-pairs-up-with-aravind-saamy

ராஜாபாண்டி இயக்கும் புதிய படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ரெஜினா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

'என்னமோ நடக்குது', 'அச்சமின்றி' ஆகிய படங்களை இயக்கியவர் ராஜபாண்டி. இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'மாநகரம்', 'சரவணன் இருக்க பயமேன்', 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்'  படங்கள் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ரெஜினா கசன்றா.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் கதையைக் கேட்ட உடன் அரவிந்த்சாமி நடிக்க ஒப்புக்கொண்டார். கதையைக் கேட்ட ரெஜினா இந்த படத்தில் தனது கதாபாத்திரம் வித்தியாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் தனக்கு இது நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று கூறியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்க உள்ளது.  பெயரிடப்படாத இந்த படத்திற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மற்ற நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close