டி.டி.வி.தினகரன் கட்சியில் இணைந்த பிரபல இசையமைப்பாளர் !

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 23 Aug, 2018 02:38 am
famous-musician-joins-ttv-dinakaran-s-party

பிரபல இசையமைப்பாளர் தினா அ.ம.மு.க துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க பல துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது. அதில் ஒரு பிரிவாக சசிகலா தலைமையில் அ.ம.மு.க செயல்பட்டு வருகிறது. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிரையில் இருப்பதால் அந்தக் கட்சியை டி.டி.வி.தினகரன் நிர்வகித்து வருகிறார்.

இதுவரை அந்தக் கட்சியில், சினிமா பிரபலங்கள் யாரும் இணைந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில், கிங், திருடா திருடி, ஜனா, திருப்பாச்சி, துள்ளல், கொக்கி, திண்டுக்கல் சாரதி உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த தினா இன்று அ.ம.மு.க கட்சியில் இணைந்துள்ளார்.

டி.டி.வி.தினகரன் தலைமையில் இணைந்துள்ள அவர் அ.ம.மு.க-விற்காக கொள்கை பாடல்களையும் இசையமைக்க உள்ளதாக கூறியுள்ளார். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close