கருணாநிதி சமாதி... உளவு பார்க்கும் நயன்தாரா!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 23 Aug, 2018 02:37 am
nayanthara-planning-to-visit-karunanidhi-s-memorial

கருணாநிதி மறைவின்போது வெளியூரில் படப்பிடிப்பில் இருந்ததால் அவருக்கு அஞ்சலி செலுத்த வர இயலாத காரணத்தால் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.

மனோரமாவின் இறுதி சடங்குக்கு வந்து படாதபாடு பட்டார் அஜித். அதையே அனுபவமாக எடுத்துக் கொண்டதால், கூட்டம் சேர்வதற்கு முன்பே ராஜாஜி ஹாலுக்கு வந்து வணங்கிவிட்டு புறப்பட்டார் அவர். கடைசி வரை விஜய் வரவில்லையே என்று கண்மேல் கண் வைத்து காத்திருந்த ரசிகர்களுக்கு மட்டும் ஏமாற்றம். அவர் அமெரிக்காவில் படப்பிடிப்பில் இருந்தார். ஆனால் மறுநாளே புறப்பட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார். த்ரிஷா கலைஞரின் நினைவிடத்திற்கு மறுநாள் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நயன்தாராவும் கூட்டமில்லாத நேரத்தில் கருணாநிதி சமாதிக்கு வருவதாக திட்டமிட்டு இருக்கிறாராம். அங்கு வரும்போது தன்னைக் காண கூட்டம் சேர்ந்து விடுமோ? என்கிற அச்சத்தால் அவரது உளவாளிகளிடம் கூட்டம் இல்லாத நேரத்தை பார்த்து கூறுமாறு உத்தரவிட்டு இருக்கிறாராம் நயன்தாரா. கருணாநிதியின் இறப்புக்கு நயன்தாரா எழுதிய இரங்கல் கடிதத்தில், 'தங்களுடைய இனமான தலைவனை இழந்து வாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்துக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் இரங்கல் செய்தி இது. நம் வாழ்வில் மிகுந்த இருண்ட 24 மணி நேர சோதனை இது எனச் சொல்லலாம். சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம்.

 நாம் காலத்தை வென்ற எழுத்தாளரை, சிறந்த சொற்பொழிவாளரை, மிகச் சிறந்த அரசியல்வாதியை, நம் மாநிலத்தின் முகவரியான முகத்தை இழந்து வாடுகின்றோம். நம் மாநிலத்தின் குரலாக 75 ஆண்டுகளாக அவர் குரல் இருந்து வந்து இருக்கிறது. அவர் ஆற்றி இருக்கும் சாதனைகள் எண்ணில் அடங்காதவை. அவர் ஆட்சியில் இருக்கும்போது புரிந்த சாதனைகள் மறக்க முடியாதவை. அவர் பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்ற கழகத் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இந்த மீளாத் துயரில் இருந்து மீண்டு வர என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெளி ஊரில் நடந்து வரும் படப்பிடிப்பு காரணமாக அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன்' எனக் குறிப்பிட்டு இருந்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close