வைரலாகும் சர்கார் படப்பிடிப்பு ஃபோட்டோ!

  Newstm Desk   | Last Modified : 26 Aug, 2018 01:55 pm

sun-pictures-released-official-sarkar-working-still

விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு ஃபோட்டோவை வெளியிட்டது சன் பிக்சர்ஸ்.

'மெர்சல்' படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் 'சர்கார்'. துப்பாக்கி, கத்தி படங்களுக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் இது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். 

விஜயின் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இதன் பாடல்கள் வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்கார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், படப்பிடிப்பு ஃபோட்டோவை வெளியிட்டுள்ளது. 

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சீன் குறித்து விஜயிடம் விளக்குவது போல அந்த புகைப்படம் உள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் இந்த ஃபோட்டோ வைரலாகி வருகிறது. 

அடுத்த 5 நாட்களுக்கு படப்பிடிப்பு ஃபோட்டோக்கள் வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close