போலீசில் சிக்கினாரா நடிகை சமந்தா...?!

  Newstm Desk   | Last Modified : 01 Sep, 2018 11:44 am

actress-samantha-caught-by-police

ஓட்டுநர் உரிமம் இல்லாத காரணத்தினால் தன்னை போலீஸ் பிடித்ததாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். 

யு-டர்ன் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படு பிசியாக இருக்கிறார் சமந்தா. ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் கன்னட படமான யு-டர்ன் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் லீக் ரோலில் நடிகை சமந்தா நடித்துள்ளார். படம் வரும் செப்டம்பர் 13ம் தேதி வெளியாக இருக்கிறது. 

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சமந்தா, தனது கடந்த கால வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "நான் 11ம் வகுப்பு படித்து வந்த நேரத்தில், என் தந்தை எனக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்தார். பல்லாவரம் தெருக்களில் மட்டுமே எனக்கு அனுமதி தரப்பட்டது. ஆனால் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் நான் எனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு ஏர்போர்ட்டுக்கு அருகில் சென்றுவிட்டேன். அப்போது என்னை போலீசார் பிடித்துவிட்டனர். என்னுடைய ஓட்டுநர் உரிமத்தை கேட்டனர். என்னிடம் இல்லாதால் அவர்களிடம் என்னை விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டேன். சிறிது நேரம் கழித்து அவர்கள் என்னை போக அனுமதித்தித்தனர்" என்றார். 

சிவகார்த்திகேயனுடன் சமந்தா நடித்திருக்கும் சீமராஜா படமும் செப்டம்பர் 13ம் தேதி ரிலீசாக இருக்கிறது. மேலும், தளபதி 63 படத்தில் அட்லீ - விஜயுடன், சமந்தா இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. என்னினும் இது குறித்த செய்தியை சமந்தா மறுத்துள்ளார்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.