18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் பாலிவுட் பிரபலம்

  Newstm Desk   | Last Modified : 01 Sep, 2018 04:59 pm

naseeruddin-shah-set-to-make-his-re-entry-in-tamil-cinema-after-18-years

18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமா உலகில் கால்பதிக்க இருக்கிறார் பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் நசீருதீன் ஷாஹ். 

கடந்த 2000ம் ஆண்டு கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட் அடித்த படம் 'ஹே ராம்'. இப்படத்தில் மகாத்மா காந்தியாக, பாலிவுட் நடிகர் நசீருதீன் ஷாஹ் நடித்திருப்பார். இவர் தற்போது 18 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகை தர இருக்கிறார். 

இயக்குனர் பிரகாஷ் தேவராஜன் படத்தில் நசீருதீனை நடிக்க வைகை கடைசி கட்ட பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே மும்பையில் நசீருதீனை நேரில் சந்தித்து பிரகாஷ் படத்தின் கதையை விவரித்துள்ளார். அவரும் தனக்கு கதை பிடித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். எனினும் இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close