கேரளா நிவாரண நிதியாக ஏ.ஆர்.ரகுமான், ரூ.1 கோடி நிதியுதவி 

  சுஜாதா   | Last Modified : 03 Sep, 2018 10:28 am
ar-rahman-donates-1-crore-for-kerala-flood-relief

கேரளா வெள்ள நிவாரண நிதியாக,  பல நடிகர்கள், நடிகைகள் உதவி வரும் நிலையில்,  இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி 1 கோடி ரூபாய் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார். 

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவால் பேரழிவு ஏற்பட்டது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்ட மக்கள் மழைக்குப் பலியாகினர். பலர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கி இருந்தனர். 

தற்போது மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதை தொடர்ந்து, கேரள வெள்ள நிவாரணத்திற்கு பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டு நிறுவனர்  என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. 

இந்நிலையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்த ஏ.ஆர்.ரகுமான், ரூ.1 கோடி கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார். 

முன்னதாக, லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘முஸ்தபா... முஸ்தபா...’ என்ற பாடலை, ‘கேரளா... கேரளா... டோண்ட் வொர்ரி கேரளா... காலம் நம் தோழன் கேரளா...’ என்று பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close