பழம்பெரும் காமெடி நடிகர் காலமானார்.

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2018 03:20 pm

veteran-comedian-passes-away

பிரபல காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கவுண்டமணி, செந்தில், வடிவேலு என்று நகைச்சுவை நடிகர்களுடன் நடித்த பிரபலமான இவர் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததார். பொதுவாகவே பழைய திரைப்படங்களில் கும்பலாக நகைச்சுவை காட்சிகள் அமைப்பது தான் வழக்கம். அவ்வாறு அமைக்கப்பட்ட பல காட்சிகளில் அதிகமாக இடம்பிடித்தவர் வெள்ளை சுப்பையா.

அந்த கால படங்களில் நடித்த இவர் தற்போது சினிமா வாய்ப்புகள் இல்லாததால் தனது சொந்த ஊரான புஞ்சை புளியம்பட்டியில் வசித்து வந்தார். அப்போது தான் அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்கு கையில் பணம் இல்லாமல் அவதிப்பட்ட வெள்ளை சுப்பையா  மாவட்ட ஆட்சியரிடம்  நிதியுதவிக்காக கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் நோய் முற்றிப்போனதால் அவர் தனது 74 வயதில் இன்று மரணமடைந்தார்.

இதே போல லூஸ் மோகன், குள்ளமணி, அல்வா வாசு என பல நடிகர்கள் தங்களின் கடைசி காலத்தில் போதிய வருமானம் இல்லாமல் வறுமையில்  மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close