#RIP 377 : தன்பாலின உறவு வழக்கு தீர்ப்பு குறித்து பிரபலங்கள் கருத்து!

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2018 05:31 pm
film-personalities-reactions-on-section-377-verdict

தன்பாலின உறவு வழக்கில் இன்று வழங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில் 377 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு  சினிமா பிரபலங்கள் பலர் ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

நடிகை த்ரிஷா: சரியான பாதை!

 

— Trish Krish (@trishtrashers) September 6, 2018

நடிகர் சித்தார்த்: மக்களின் பாதுகாவலர் நீங்கள் தான் என நிரூபித்ததற்கு உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய எல்.ஜி.பி.டி சமூகத்தினருக்கு வாழ்த்துகளும் அன்பும். அருமையான நாள். நீங்களாக இருங்கள்... உண்மையாக இருங்கள். இந்தநாளுக்காக போராடியவர்களுக்கு மரியாதை! 

 

நடிகை காஜல் அகர்வால்: அன்பே வெல்லும்! மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி!

 

 

நடிகை டாப்ஸி: எனது 2018 இந்தியா!!! மற்றவர்களின் விருப்பத்தை மதிப்போம்.

 

நடிகை அலியா பட்: நமது நாட்டின் முக்கியமான நாள். நன்றி!

— Alia Bhatt (@aliaa08) September 6, 2018

நடிகை அனுஷ்கா சர்மா: காதலுக்காக, காதலிக்கும் உரிமைக்காக இன்று பெரிய அடியை முன்னெடுத்து வைத்திருக்கிறோம்!

 

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர்: வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. இன்று மிகவும் பெருமையாக உணர்கிறேன். இன்று இந்தியா அதன் ஆக்சிஜனை திரும்ப பெற்றுக்கொண்டது. 

நடிகர் அக்‌ஷய் குமார்: இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க நாள். அனைவருக்கும் அன்பு, அனைவருக்கும் சுதந்திரம். RIP #Section377

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close