சீமராஜாவில் கலக்கும் பரோட்டா சூரி- வைரலாகும் புகைப்படம்

  Newstm Desk   | Last Modified : 13 Sep, 2018 11:18 am
parotta-soori-rocks-in-seemaraja

சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் நடிக்கும் சூரியின் சிக்ஸ் பேக் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

சிவகார்த்திகேயன், சமந்தாவின் 'சீமராஜா' படம் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமாக வெளியாகி உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அதிகப்படியான திரையரங்குகளில் சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியிடப்படுகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்ட பரோட்டா சூரியின் சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்டது படக்குழு. 

வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே சிக்ஸ் பேக் சூரியின் புகைப்படம் அதிகப்படியாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இது நம்ம பரோட்டா சூரியா? என்ற அளவிற்கு சூரி தனது கெட்டப்பை மாற்றியுள்ளார். தற்போது சூரி தான் சமூகவலைத்தளத்தில் ஹீரோவாக வைரலாகி வருகிறார்.  தமிழ் சினிமாவிலேயே ஒரு காமெடி நடிகர் தனது உடலை இப்படி மெருகேற்று இருப்பது இதுவே முதல்முறை. 

பொன்ராம் இயக்கத்தில் உருவான சீமராஜா படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், கீர்த்தி சுரேஷ் போன்ற நட்சத்திர பட்டாளம் படத்தில் நடித்துள்ளது. டி இம்மான் இசைமைத்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close