புதிய சாதனைப் படைக்குமா 2.0 டீசர்?

  திஷா   | Last Modified : 13 Sep, 2018 01:16 pm
2-0-teaser-goes-viral

கடந்த 2010-ல்  வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றப் படம் எந்திரன். இதனை இயக்குநர் ஷங்கர் பிரமாண்டமாக இயக்கியிருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசீகரன் என்கிற பேராசிரியராகவும், சிட்டி என்கிற ரோபோ கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராய் இதில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இதன் பிரமிக்க வைக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகளும், அதி நவீன தொழில் நுட்பமும் ரசிகர்களை வியக்க வைத்தன. 

இந்நிலையில் இதன் அடுத்தப் பாகமான 2.0 தற்போது உருவாகி வருகிறது. இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஏமி ஜாக்ஸன் நடிக்கிறார். வில்லனாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். இதன் டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இணையத்தில் 2டி-யிலும், தியேட்டர்களில் 3டி-யிலும் இன்று வெளியாகியிருக்கிறது. 

டீசரின் ஆரம்பமே செல்ஃபோன்கள் மாயமாகும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், ஸ்மார்ட் ஃபோன்களை முக்கியப் படுத்திய கதையாக இருக்கக் கூடும் என்பது பலரின் எண்ணம். மாயமான செல்ஃபோன்கள் வில்லன் அக்‌ஷய் குமார் முகமாக மாறுவது, சிட்டி ரோபோவின் ஆக்‌ஷன் காட்சிகள் என கிராஃபிக்ஸ் காட்சிகளுக்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறார் ஷங்கர். கடைசியில் குயில் போல ரஜினி, 'குக்கூ' என சொல்வது ப்யூர் ரஜினிஸம். 

சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் லீக் ஆன போதே, இதை பலரும் பார்த்து விட்டார்கள். அதனால் வேறு ஏதாவது காட்சி இருக்குமா என எதிர்ப்பார்த்தவர்களுக்கு இதில் ஏமாற்றமே மிச்சம். எப்போதும் ரஜினியின் படங்கள் சாதனை புரிய தவறாது. அந்த வகையில் 5 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப் பட்ட மெர்சலின் சாதனையை 2.0 முறியடிக்குமா என்பதே சினிமா ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு. இத்தனைக்கும் மெர்சல் தமிழில் மட்டும் தான் வெளியானது. 2.0  தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகியிருக்கிறது. டீசர் வெளியாகி 4 மணி நேரத்தை நெருங்கும் நேரத்தில் தமிழில் 2.5 மில்லியன் பார்வையாளர்கள் தான் பார்த்திருக்கிறார்கள். தெலுங்கு மற்றும் இந்தியில் தலா 1.1 மில்லியன். பொறுத்திருந்து பார்ப்போம்! 

newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close