இதயம் முழுதும் கார்த்திக் வசம்- #HBDKarthik

  சௌந்தரியா   | Last Modified : 14 Sep, 2018 07:39 am
actor-karthik-birthday-special

He is a handsome man with charming personality- மௌனராகம் மானோகருக்காக எழுதப்பட்டவை!

தமிழ் சினிமாவில் எல்லா காலக்கட்டத்திற்கும் சாக்லேட் பாய் இடத்தை நிரப்ப நிறைய பேர் இருந்திருக்கிறார். ஏன்... விஜயும் அஜித்தும் கூட அந்த இடத்தில் இருந்து வந்தவர்கள் தான்.

இப்போதைக்கு ஹரிஷ் கல்யாண், அதர்வா ஆர்யா, விஜய் தேவரகொண்டா என பலர் பெண்களை கவர்ந்துள்ளனர். இவர்களுக்கு முன் ஜெமினி கணேசன் முதல் மாதவன் வரையில் பலரையும் பார்த்து விட்டோம். 

மாஸ் ஹீரோ என்ற பெயரை கூட குதித்து அடித்து வாங்கிவிடலாம். பெண்களை கவர்ந்து ச்சோ க்யூட் ல என்று மயங்க வைப்பது அவ்வளவு ஈசி இல்லை. சாக்லேட் பாய்களின் வேலை அதுவாக தான் இருக்கும். இந்த பிரிவில் பலரை பார்த்திருக்கிறோம் என்றாலும் அவர்களுள் கொஞ்சம் தனித்து இருப்பவர் கார்த்திக். 

இவர் பின்னாளில் காதல் மன்னனாக ஆவார் என்று முன்னரே யூகித்து தான் அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிக்க வைத்தார்காளோ என்னவோ... டீன் பிள்ளைகளின் ஓவர் எக்சைட்டட் லவ் ஸ்டோரியில் அத்தனை கச்சிதமாக நடித்திருப்பார் கார்த்திக். இந்த படத்திற்கு பிறகு இவரின் கிராஃபும் உயர 1986ல் மெளன ராகம் படத்தில் நடித்தார். அது தான்... அதே தான் எல்லாவற்றையும் மாற்றியது. ஸ்டாக்கிங் தான், தப்பு தான் என்றாலும் மனோகரை பார்க்க அத்தனை அழகாக இருக்கும். போதாக் குறைக்கு அவர் கம்யூனிஸ்ட்டாக வேறு நடித்திருப்பார். கலகம் செய்யும் அழகு ஆண்கள் தான் எத்தனை அழகு... மனோகரும் அப்படி தான். காப்பி ஷாப்பில் 'ஹே சந்திரமௌலி' காட்சி ஓவர் ஹைப் செய்யப்பட்டதால், அதற்கு பிறகு ரேவதி தண்ணீரை எடுத்து முகத்தில் ஊற்றியது செம்ம்ம... க்யூட்டாக இருக்கும் கார்த்திக் முகம் அண்டர்ரேட்டட் சீன் ஆனது. இப்படி இந்த படத்தில் கார்த்திக் வரும் ஒவ்வொரு சீனையும் ரசித்து ரசித்து பேசலாம். என்ன செய்வது இந்த படம் வெளியாகி 2 வருடங்களில் அசோக்காக நடித்து விட்டாரே!

மணிரத்னம் இயக்கிய அக்னிநட்சத்திரம் படத்தில் ஹாட் அண்ட் ஹேண்ட்சம் அசோக்காக நடித்திருப்பார் கார்த்திக். பிரபுவுடனான சண்டைக்காட்சிகள் எல்லாம் இருக்கட்டும், ஆனால் நிரோஷா உடனான காட்சிகள் நியாபகம் இருக்கிறதா... இதயம் முழுதும் கார்த்திக் வசம் தானே! 

கார்த்திக்கும்-நிரோஷாவும் 'அப்படி' ஜோடிகள். டாஸ்கி அழகியும், ஃபேர் ஹீரோவும் பின்னாளில் அதிகமாக  ஜோடியாக காரணமாக இருந்தவர்களும் இவர்கள் தான் எனலாம். இவர்கள் போல யாரும் கவரவில்லை.

இதே போல கார்த்திக்-ரம்பா ஜோடியும் ஹிட் ஜோடிகள் தான். வெண்ணிலா வெளியே வருவாயா... என கையசைத்து பாடும் கார்த்திக்கிற்கு ஹார்ட்களை பறக்கவிடலாம்.

முன்னரே சொன்னது போல சாக்லேட் பாய் பொறுப்பு கடினமான ஒன்றாக காரணம் அவர்கள் நகைச்சுவைகளிலும் கைத்தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். டைமிங்கில் பேசுவதும், அவ்வபோது இன்னோசன்ட்டாக இருந்து மொக்கை வாங்குவதும் என பேலன்ஸ்டாக இருக்க வேண்டும். இதுவும் கார்த்திக்கிற்கு ஈசியாக வந்தது. கார்த்திக்- கவுண்டமணி- சுந்தர்.சி கூட்டணியில் வந்த படங்கள் எல்லாம் ரகளை ரகத்தின் எடுத்துக்காட்டுகள்.மோகனை போல கார்த்திக்கின் பெரிய ப்ளஸ் அவர் படங்களில் இருக்கும் பாடல்கள். பச்சமல பூவு முதல் ஏதோ ஒரு பாட்டு வரை நமது ஃபேவரைட்  பாடல்கள் எல்லாம் கார்த்திக் நடித்த பாடல்கள் தான். 1980ல் ஹீரோவாக நடிக்க துவங்கியவர், 2006வரை ஹீரோவாக தான் நடித்தார். இத்தனை வருடங்களும் பெண்களை கவர்ந்தவர் என்ற பெயருடன் இருந்தார் என்பது தான் நோட் பண்ண வேண்டிய விஷயம். 

மாதவன் கூட இருக்காரே என்று கூறலாம்.. என்னதான் வேஷ்டி கட்டி நலதமயந்தியில் கிராமத்து ஆணாக நடித்திருந்தாலும், அவர் முகத்தில் ஏதோ எலைட்டிசம் இருக்கும். கார்த்திக் அப்படி இல்லை. குடும்பத்தில் இருக்கும் கலையான முகம் கொண்ட மாமா பையன் போன்ற அழகு கார்த்திக்குடையது. அதனால் தான் நீண்ட நாட்களுக்கு பின் அனேகனில் அவர் நடித்த போது, அவரது ரசிகைகள் தியேட்டர் பக்கம் சென்றனர். அந்த படத்தின் ட்விஸ்ட்டுகளை பார்த்து கடுப்பானாலும், வெளியே வந்து செம்ம.. கார்த்திக் கலக்கிட்டாரு என்று சொல்லிவிட்டு சென்றனர். 

4 ஃப்லிம்பேர், 4 தமிழ்நாடு அரசு விருதுகள் என இவர் நடிப்பிலும் நவரச நாயகனாக கலக்கினார். 2000ன் இறுதியில் சரியான படங்கள் கிடைக்காததாலும், புதியவர்களின் வருகையாலும் ஃபீல்டில் இருந்து வெளியே சென்றார். அதற்காக மறந்து விட முடியுமா என்ன? ஹேப்பி பேர்த்டே எவர் கிரீன் சாக்லேட் பாய்!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close