பா.ரஞ்சித்தின் சாதிய அசாத்திய துணிச்சல் - சருக்குமா? சாத்தியமா?

  பா.பாரதி   | Last Modified : 15 Sep, 2018 11:41 am

pa-ranjith-strategies

‘சினிமா ஒரு கலை‘ என இனியும் ஜல்லி அடித்துக்கொண்டிருக்க முடியாது. கிராபிக்ஸ் பணிகளுக்கே ஒரு வருடத்தையும், பல கோடிகளையும் விழுங்கும் சினிமா –முழுக்க முழுக்க வியாபார பொருள் என்பதே சத்தியம்.

பொதுவாக ஒரு வியாபாரி தனது சாதி அடையாளத்தை வியாபாரத்தில் திணிப்பது இல்லை. அது சரவணா ஸ்டோர்சாக இருந்தாலும் சரி... சரவண பவனாக இருந்தாலும் சரி.

சினிமா ஒரு வியாபார கேந்திரமாக உருமாறிவிட்ட சூழலில் –இயக்குநர் பா.ரஞ்சித் , தனது அடையாளத்தை சினிமாவில் பதிவு செய்யப்போவதாக கூறி கோடம்பாக்கத்தை அதிர வைத்திருக்கிறார்.

சாதிய முரண்களுக்கு எதிராக ‘பரியேறும் பெருமாள்’என்ற படத்தை தயாரித்துள்ள பா.ரஞ்சித் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவரது பேட்டியின் சில துளிகள் இங்கே..

"எனக்கு முன்னோடி அம்பேத்கர் மட்டுமே. அவருடைய கனவு மனித சமூகத்தின் மாண்பை மீட்டு எடுப்பதாக மட்டுமே இருந்தது. திரைப்படங்கள் மூலமாக மனித சமூகத்தில் இருக்கிற ஏற்றத்தாழ்வை , சாதி முரணை உடைப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்துவேன்" என்றார்.

நிஜமாகவே துணிச்சலான முயற்சி. ஏற்கனவே சொன்னது போல் வணிகமாக தொழில் துறையாக மாறிவிட்ட வெள்ளித்திரையில், இவரது வடிவமைப்புகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? வெற்றிகளை தேடித்தரும்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

தனது வடிவமைப்பின் சோதனை ஓட்டமாக பா.ரஞ்சித் உருவாக்கிய காலா திரைப்படத்துக்கு ‘மிக்ஸ்டு ரெஸ்பான்ஸ்கள்’கிடைத்தது. தென்னகத்தின் பல பகுதிகளில் ’காலா’வுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை. இத்தனைக்கும் அது ரஜினியின் படம். தனது அடுத்தடுத்த படங்களின் வெற்றிக்கு பிறகே ரஞ்சித்தின் கனவுகள் சாத்தியாகுமா? என்பதை நிரூபிக்கும் என்கிறனர் சினிமா விமர்சகர்கள்.

- newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close