காத்திருங்கள்... 2 மாதத்துக்கு அப்டேட் மழைதான் - சர்கார் பாடலாசிரியர் ட்வீட்!

  திஷா   | Last Modified : 14 Sep, 2018 04:31 pm

lyricist-vivek-about-sarkar

தீபாவளிக்கு ஸ்வீட்ஸும், பட்டாசும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அன்றைக்கு ரிலீஸாகும் படங்களுக்கும் அதிக முக்கியத்துவம் இருக்கும். அப்படி விஜய் நடிக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீஸ் என எப்போதோ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தை இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது.

இதில் கீர்த்தி சுரேஷ், வரலக்‌ஷ்மி சரத்குமார், ராதா ரவி, பழ.கருப்பையா, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துரிதமாக நடைப்பெற்று வருகின்றன. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப் பட்ட, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும், அதன் பிறகு வெளியான ஒர்க்கிங் ஸ்டில்களும் ரசிகர்களிடம் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. 

ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைப்பில் இதன் பாடல்கள் வரும் அக்டோபர் 2-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப் பட்டிருக்கிறது. படத்தின் பாடல்களை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். 

படத்தின் அப்டேட் கேட்டு விஜய் ரசிகர்கள் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் விவேக் தனது ட்விட்டரில், "நண்பர்களே சர்கார் பற்றிய உங்களின் ஆவல், விஜய் சார் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது. அவர்கள் சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். மன்னிக்கவும், என்னால் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. அதனால் தயவுசெய்து காத்திருங்கள். அவர்கள் ஆரம்பித்து விட்டால் 2 மாதத்திற்கு அப்டேடுகளால் மிதப்பீர்கள்" எனத் தெரிவித்துள்ளார். 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close