பாடகராக அவதாரம் எடுத்த ஜெய் !

  கனிமொழி   | Last Modified : 14 Sep, 2018 04:28 pm

actor-jai-turns-a-singer-now

நடிகர் ஜெய் ஜருகண்டி படத்தின் மூலம் பாடகராக அவதாரம் எடுத்துள்ளார்.

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கியிருக்கும் படம் ஜருகண்டி. ஜெய்-ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரோபோ சங்கர், டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

சென்னை 28 படம் மூலம் பிரபலமான நடிகர் நிதின் சத்யா இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். நமக்கு தேவைனு வரும் போது நாம் ஒரு விஷயத்தை நியாயப்படுத்துவோம். அந்த வகையில் லோன் வாங்கி கஷ்டப்படும் ஒருவரை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளது இந்த படம் என்கிறார் படத்தின் இயக்குநர்.

போபோசிஸ் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி திரையிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அதே நாளில் பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர் நடித்த பரியேரும் பெருமாள் திரைப்படம் வெளியாகிறது. 

இப்படத்தில் ஜெய் பாடியுள்ள செய்யுறத செஞ்சு முடி என்ற பாடல் சிங்கிள் டிராக்காக செப்டம்பர் 15 ரிலீஸ் ஆகிறது. முதல் முறையாக ஜெய் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close