வைரலாகும் சூர்யா 37 படம்!

  திஷா   | Last Modified : 14 Sep, 2018 06:03 pm

suriya-37-still-goes-viral

விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படத்திற்குப் பிறகு செல்வராகவனின் ‘NGK’ மற்றும் கே.வி.ஆனந்தின் பெயரிடப் படாத படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சூர்யா. கே.வி.ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தை சூர்யா 37 என்றே படக்குழுவினரும், ரசிகர்களும் குறிப்பிடுகிறார்கள். 

இதில் ஹீரோயினாக சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால், தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ், பாலிவுட் நடிகர் பொம்மன் இரானி, ஆர்யா, இயக்குநர் சமுத்திரக்கனி என முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். 

படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது இதன் படம் ஒன்று வெளியாகியுள்ளது. சூர்யா, மோகன்லால் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜில்லுனு ஒரு காதல் படத்தில் ஜோதிகாவுக்கு ஜோடியாக வரும் தோற்றத்தைப் போல இருக்கிறார் சூர்யா. மோகன்லால் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இப்போது இணையத்தில் சூர்யா ரசிகர்களும், மோகன்லால் ரசிகர்களும் இதனை மாற்றி மாற்றி லைக் அன்ட் ஷேர் செய்துக் கொண்டிருக்கிறார்கள். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close