2.0-வால் கூட முறியடிக்க முடியாத மெர்சல் சாதனை!

  திஷா   | Last Modified : 16 Sep, 2018 12:48 am

mersal-teaser-crosses-40m-views

இப்போதெல்லாம் ஒரு, படத்தின் ட்ரைலர் அல்லது டீசர் வெளியானதும் அதை எவ்வளவு பேர் பார்த்திருக்கிறார்கள் என்பதை கணக்கிட ஆர்வம் அதிகரித்திருக்கிறது. 

இந்நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தின் டீசர் புதிய சாதனையைப் படைத்துள்ளது. 2.0 டீசர் வெளியாகி ஒரு லட்சம் லைக் பெற 37 நிமிடம் ஆனது, ஆனால் அதே அளவு லைக்கை 10 நிமிடத்தில் மெர்சல் பட டீசர் பெற்றிருந்தது. மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான 2.0 டீசரை 24 மணி நேரத்தில் 24.8 மில்லியன் ரசிகர்கள் மட்டுமே பார்த்திருக்கிறார்கள்.

 

இந்நிலையில் ஒரே மொழியில் வெளியான மெர்சல் டீசர் தற்போது 40 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அதோடு 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கும் முதல் தென்னிந்திய படம் என்ற சாதனையையும் இது படைத்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துக் கொண்டாடி வருகிறார்கள். 

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close