மகேஷ் பாபுவுக்கு நடிக்கவே வரல என கூறி சிக்கலில் மாட்டிக்கொண்ட ஸ்டான்ட் அப் காமெடியான்

  Newstm Desk   | Last Modified : 16 Sep, 2018 01:47 pm

after-abusive-messages-comedian-manoj-apologises-to-mahesh-babu-fans

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு நடிக்கவே வரல என்று கூறிய ஸ்டான்ட் காமெடியன் மனோஜ் பிரபாகருக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். 

தமிழுக்கு விஜய் போல தெலுங்கில் கொடிக்கட்டி பறப்பவர் மகேஷ் பாபு. அவர் முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 

இந்நிலையில் தமிழ் ஸ்டான்ட் அப் காமெடியன் மனோஜ் பிரபாகர் இந்த படத்தை கிண்டல் செய்யும் வகையில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அதில், மகேஷ் பாபுவுக்கு நடிக்கவே தெரியவில்லை. அவர் முகத்தில் பாவனைகளே வருவதில்லை என்பது போல பேசியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த மகேஷ் பாபு ரசிகர்கள் மனோஜ் பிரபாகர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதன் படி அவரும் மன்னிப்பு கேட்டுவிட்டார். 

இந்நிலையில் இவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழ் நடிகர் சங்கத்திற்கு தெலுங்கு நடிகர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. ஆனால் மனோஜ் பிரபாகர் நடிகரோ அல்லது நடிகர் சங்கத்திலோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close