செக்கச் சிவந்த வானம் படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்!

  Newstm Desk   | Last Modified : 18 Sep, 2018 10:16 am
chekka-chivantha-vaanam-gets-u-a-certificate

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் செக்கச் சிவந்த வானம் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். 

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள படம் 'செக்கச் சிவந்த வானம்'. இந்தப் படத்தில் நடிகர்கள் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதீதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு, வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். 

படப்பிடிப்பு முடிந்து, புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படம் சென்சார் போர்டிற்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். 

வருகிற செப்டம்பர் 27ம் தேதி ரிலீசாக இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் சமீபத்தில் வெளியான பாடல்களுக்கு ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close